#Kovai #BikeStunt #ViralVideo #Reels #Crime #TNPolice #ThanthiTV
Kovai Bike Stunt Viral Video | மேம்பாலத்தில் வீலிங் - பீதியை கிளப்பும் இளைஞர்களின் ஸ்டண்ட் வீடியோ.. இணையத்தில் தீயாய் பரவிய ரீல்ஸ் கோவை சாய்பாபா காலனி முதல் கவுண்டம்பாளையம் மேம்பாலம் வரை நள்ளிரவு நேரத்தில் விதிகளை மீறி 2 இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள், பைக்கில் வீலிங் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பைக்கில் எவ்விதப் பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மூன்று இளைஞர்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்றதுடன், மேம்பாலத்தில் வாகனத்தை இயக்கியபடியே முன் சக்கரத்தை தூக்கியபடி வீலிங் சாகசத்திலும் மாறி மாறி ஈடுபட்டுள்ளனர். இவர்களின் இந்த அதிவேக அத்துமீறல்கள் குறித்த காட்சி பின்னே வந்த நண்பர்களால் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.