தமிழ்நாடு

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : இந்த ஆண்டு என்ன நடக்கும்?

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், கடந்தாண்டைபோல, நடப்பாண்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

தந்தி டிவி

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், கடந்தாண்டைபோல, நடப்பாண்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

நடப்பாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர, 59 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் ஜூலை 3 ஆம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிட, மருத்துவக் கல்வி இயக்குனரகம் தயாராகி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிக இடங்களை பிடித்தனர்.

அரசு மருத்துவ கல்லூரிகளில், பொதுப் பிரிவில் 156 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர் பிரிவில் ஆயிரத்து 255 பேர், இஸ்லாமிய மாணவர்கள் 120 பேர்,

மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இதேபோல, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த 648 பேர், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த 438 பேர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த 82 பேர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த இரண்டாயிரத்து 766 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

தனியார் கல்லுாரிகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் 389 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 173 மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். தனியார் கல்லூரிகளில் கடந்தாண்டு சேர்ந்த மாணவர்களில், பிற பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. பல் மருத்துவத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள ஒரே அரசு பல்மருத்துவக் கல்லூரி​யில் 100 இடங்கள் உள்ளன. பொதுப்பிரிவில் 14 பேரும், பிற்படுத்தப்பட்ட பிரிவில் 45 பேரும், இஸ்லாமியர் 4 பேர், சீர்மரபினர் 19 பேர், ஆதிதிராவிடர் 14 பேர், அருந்ததியர் 3 பேர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஒருவர் என, 100 பேர், பல் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களே அதிகளவில் சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரிவில் 511 மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 175 மாணவர்களும் சேர்ந்தனர். நடப்பாண்டும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கம் தொடருமா என்பது, ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு