தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு இவ்வளவா?

தந்தி டிவி

இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நேற்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டம், களிமண்குண்டு பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சல்மான் கான் என்பவரிடமிருந்து கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த தங்கத்தினுடை புகைப்படத்தையும் அதனுடைய மதிப்பையும் சுங்கத்துறையினர் தங்களுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், தங்கத்தின் மதிப்பு 8 கோடியே 92 லட்ச ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்