துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதிக்கு செய்தது என்ன? என, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கம்பம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடும் என்.ராமகிருஷ்ணன், பெரியகுளம் - தனி தொகுதியில் போட்டியிடும் சரவணகுமார்,
ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகராஜன், மற்றும் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக, ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், போடிநாயக்கனூரில் ஒரு சிறிய அளவில் கூட தொழிற்சாலை ஏற்படுத்தவில்லை என்றும், அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்து முதன்முதலில் துரோகம் இழைத்தவர் ஓ.பி.எஸ். என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.