தமிழ்நாடு

Chennai Coimbatore Omni Bus| 45 ஆட்களுடன் வந்த சென்னை ஆம்னி பஸ்ஸுக்கு நேர்ந்த நிலை

45 ஆட்களுடன் வந்த சென்னை ஆம்னி பஸ்ஸுக்கு நேர்ந்த நிலை

thanthitv

அப்படியே கேரள விபத்து போல தமிழகத்திலும்.. 45 ஆட்களுடன் வந்த சென்னை ஆம்னி பஸ்ஸுக்கு நேர்ந்த நிலை

சென்னையில்இ ருந்து இரவு 45 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற‌து. இந்நிலையில் இன்று அதிகாலை சங்ககிரி மேம்பாலம் பகுதியில் பேருந்து சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு லாரி திடீரென சாலையோர தடுப்பு மீது மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த சொகுசு பேருந்து லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்ககிரி போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN New Secretariat | CM Vijay| புதிய தலைமை செயலகம் - நில வகைப்பாட்டை மாற்ற CMDA முடிவு

Chennai City Police|தமிழகத்தை குலைநடுங்க விட்ட `தலைநகர்’ கொலைகள் - `தேடி தேடி வேட்டையாடும் காவல்துறை

Breaking | Bank Strike | ஸ்டிரைக்-ல் வங்கி ஊழியர்கள் | அடுத்த 4 நாட்கள் மூடல்?

Rain Update | அதிகாலையே தொடங்கிய மழை.. அடுத்து வந்த முக்கிய அப்டேட்

CM Vijay | Britain | குடும்பமாக குவிந்த மக்கள்..! இறங்கி வந்து சர்ப்ரைஸ் கொடுத்த CM விஜய்..