தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

தந்தி டிவி

#palani | #temple

பழனி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் என்ன நடந்தது.. அபசகுனம்?.. பீதியில் பக்தர்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின், ராஜகோபுர உச்சி சேதமடைந்தததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி மலைக்கோவிலின் ராஜகோபுரம் உச்சியில் கொம்பு போன்று உள்ள கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. கோபுரத்தில் இருந்து உடைந்து தொங்குவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதற்கான காரணம் என வல்லுநர்கள் குழு கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் பழனி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், ராஜகோபுர உச்சியில் சேதம் ஏற்பட்டதால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்