Tiruvannamalai Temple | என்னங்க சொல்றீங்க.. நம்ப முடியலையே | நம்ம திருவண்ணாமலையா இது?
#tiruvannamalaitemple #tiruvannamalai #annamalaiyartemple #temple #thanthitv
அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் வருகை குறைவு- ஒரு மணி நேரத்தில் தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று வெளிமாநில பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், இன்று ராஜகோபுரம் வழியாக வரும் பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர். அம்மணி அம்மன் கோபுரம் கட்டண வழியில் வரும் பக்தர்கள் அரை மணி நேரத்தில் தரிசனம் செய்து, திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியேறுகின்றனர்.