வரும் 11ஆம் தேதி பிற்பகல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் அவருக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளோடு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்து 800 கல்லூரி மாணவ-மாணவிகள், சுய உதவிக் குழுவினர் மற்றும் அதிமுகவினர் மூவர்ணக் கொடி ஏந்தி வரவேற்பு கொடுக்கின்றனர். வாழை மற்றும் கரும்புகளால் வளைவுகள் அமைக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது. செண்டை மேளம், நாதஸ்வர நிகழ்ச்சி, தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்பு கொடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கிண்டி, சைதாப்பேட்டை, கந்தன்சாவடி, திருவிடந்தை, மாமல்லபுரம் என 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் இதற்காக 49 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.