கோவையில் நடந்த விழாவிற்கு வந்த அமைச்சர் எஸ்பி வேலுமணியை, ஆளப்போறான் தமிழன் பாடலை திரும்ப திரும்ப ஒலிக்கவிட்டு அதிமுக கட்சியினர் வரவேற்றனர். கோவையில் ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலம் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த அமைச்சரை குஷிப்படுத்துவதற்காக, இந்த பாடல் ஒலிக்கவிடப்பட்டது. வழக்கமாக அமைச்சர் வருகையின் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்த பாடலான "தாங்க தாரகையே வருக, வருக" என்ற பாடலே ஒலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.