தமிழ்நாடு

ரூ.12 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியில் உலா வரும் நெசவாளர்

ஆரணி அருகே நெசவாளர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ள மாடு மற்றும் மாட்டு வண்டியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டு நெசவு உற்பத்தியாளர் மார்க்கபந்து. இவர், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு 2 காங்கேயம் காளைகளை வாங்கியுள்ளார். அந்த காளை மாடுகளை பூட்டி ஓட்டுவதற்காக முழுமையான தேக்குமரத்தால் ஆன மாட்டு வண்டியை தயார் செய்துள்ளார்.

மாட்டு வண்டியை செய்ய, 8 லட்சத்து 45ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு தமிழரின் பாரம்பரியத்தை கொண்டு செல்லவே இதனை செய்ததாகவும் மார்கபந்து கூறியுள்ளார். தற்போது அவர் வெளியே செல்வதற்கு காங்கேயம் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியையே பயன்படுத்தி வருகிறார். ஒரு காரின் விலையை விட அதிகமாக12 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு