தமிழ்நாடு

Vallalar "நாங்க சகோதரர்கள்..." - வள்ளலார் சத்திய ஞான சபைக்கு 30 டன் அரிசி தரும் இஸ்லாமியர்

thanthitv

#vadalurvallalar | #vallalar | #thaipoosam "நாங்க சகோதரர்கள்..." - வள்ளலார் சத்திய ஞான சபைக்கு 30 டன் அரிசி தரும் இஸ்லாமியர் வடலூரில் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பு ஏற்றி வைத்த அணையா அடுப்புக்கு மதங்களை கடந்து பலரும் சேவை செய்ய முன்வந்துள்ளனர்.. அணையா அடுப்பு என்ற ஒன்றே வடலூர் சத்திய ஞான சபையின் நோக்கம்.. இங்குள்ள தர்மசாலையில், இன்றும் தினமும் மூன்று வேளையும் அன்னதானம் நடைபெறுகிறது. தமிழகத்திலேயே மூன்று வேளையும் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் ஒரே இடமும் இதுதான். இந்த நிலையில், தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, வடலூர் சத்திய ஞான சபை தர்மசாலைக்காக, மதம் கடந்த சேவையும் நடந்து வருகிறது... கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே காய்கறி கடை நடத்தி வரும் பக்கீரான் என்பவர், 30 டன் அளவிலான காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் 7 ஆயிரம் குடிநீர் பாட்டில்களை தர்மசாலைக்கு வழங்கி இருக்கிறார். இஸ்லாமியரான பக்கீரான், கடந்த 25 ஆண்டுகளாக வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு தொடர்ந்து காய்கறிகள் மற்றும் அரிசியை வழங்கி வருகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு மிகுந்த கஷ்டத்தில் இருந்ததாகவும். அப்போது தன்னுடைய நண்பர் ஒருவர் பரிந்துரை படி வள்ளலார் தர்மசாலைக்கு 5 மூட்டை அரிசி வழங்கியிருக்கிறார். அப்படி கொடுத்த சில நாட்களில் பக்கீரான் வாழ்வில் நல்லது நடக்கவே, அடுத்த ஆண்டு அரிசியின் அளவு 10 மூட்டையாகி இன்று 30 டன் அளவிற்கு வந்திருக்கிறதாம்.. மதம், இனம், மொழி என்பவற்றைத் தாண்டி, மனிதநேயமே உயர்ந்த தர்மம் என்பதை நிரூபிக்கும் இந்தச் செயல், வள்ளலார் போதித்த அருட்பெருஞ்ஜோதி வழியாக இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. பசியற்ற உலகம் என்ற வள்ளலாரின் கனவு, பக்கீரான் போன்ற மனிதநேய உள்ளங்களால் இன்றும் செயல்படுத்தப்பட்டு வருவது, சமூகத்திற்கு ஒரு உதாரணமும் கூட..

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா