தமிழ்நாடு

தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் கடல் நீர், தினசரி தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளையும் நாளைமறுநாளும் பராமரிப்பு பணி காரணமாக சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட உள்ளன. இதனால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் நெம்மேலி குடிநீர் ஆலை அறிவுறுத்தி உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்