தமிழ்நாடு

குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை

திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் வேப்பத்தாங்குடி ஊராட்சிக்குட்பட்ட வஞ்சியூர், படுவைக்காடு, மாவூர், வயலுர், பரமாக்குடி உள்ளிட்ட பல கிராம மக்கள்

குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலத்தில் ஒரு குடம் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும், உரிய சாலை வசதி இல்லாததால் தண்ணீர் கொண்டு வர மிகவும் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அப்பகுதியில் குடிநீருக்காக ஒரே ஒரு அடிபம்பை மட்டும் நம்பியிருக்க வேண்டியுள்ளதாகவும், தங்கள் குடிநீர்பிரச்சினையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்