கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலாம் மண்டல பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்மோட்டாரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் இரு மாவட்டங்களில் உள்ள சுமார் 94 ஆயிரத்து 521 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.