முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை கடந்தது. இதனிடையே, முல்லை பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால், அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 66 அடியை எட்டியது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.