தமிழ்நாடு

கே.ஆர்.பி. அணையிலிருந்து நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,208 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால், 52 அடி முழு உயரம் கொண்ட கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விநாடிக்கு 4,000 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட மக்களுக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Flood Alert | உச்சகட்டத்தை எட்டியது.. இன்னும் 2 அடி தான் - 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Kulasai Temple | Thoothukudi | ரீல்ஸ் எடுக்க தடை.. கோயில் நிர்வாகம் அதிரடி

CM Vijay | Ayudha Pooja | "ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்" - வாழ்த்து சொன்ன CM விஜய்

TN Rain Alert | சென்னையை சூழும் காரிருள் மேகம் - 24 மாவட்டத்துக்கு பறந்த அலர்ட்