கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.