தமிழ்நாடு

வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்

நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடும் கோடை காரணமாக நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுக்குள் வனத்துறையினரால் கட்டப்பட்டுள்ள மழை நீர் தடுப்பணைகள் காய்ந்து கிடப்பதாலும், வனத்தில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு போய் உள்ளதாலும் விலங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இங்கு எவ்வித கட்டுப்பாடுமின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அதனை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்