தமிழ்நாடு

நீர்நிலை இடங்களை பத்திரவுப் பதிவு செய்யக் கூடாது - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கு பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்றும், பட்டா வழங்கக் கூடாது என்றும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

* நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் பாரதி, காந்தி, அருள் நிதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

* அந்த வழக்கில் மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி பதில் மனுத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கு பத்திரவு பதிவு செய்யக்கூடாது என, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

* மேலும் அந்த இடங்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து மாநில தலைமை பதிவாளர் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆணையிட்டனர்.

* மேலும் அனைத்து நீர் நிலைகளிலும் பிளாஸ்டிக் திடக் கழிவுகளை சேர விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர்கள், நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.

* தொடர்ந்து மதுரையில் உள்ள கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றால் அதற்கு காவல்துறையிடம் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

* மேலும் மதுரை வண்டியூர் கண்மாயில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியை உடனே துவங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி