மாநிலம் முழுவதும் ஆயிரத்து 650 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் 20 லட்சம் கேன் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மாநகரில் மட்டும் 5 லட்சம் குடிநீர் கேன் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறுவதற்கான வழிமுறையை தமிழக அரசு விரைவாக உருவாக்க வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள் மூடுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், சென்னை மாநகரில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.