Perambalur | Sewage Water | கழிவு நீர் மறுசுழற்சி - தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாதனை
#perambalur #sewagetreatment #recycle #thanthitv
கழிவு நீர் மறுசுழற்சி - தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாதனை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டையில் 2.50 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீரை மறுசுழற்சி செய்து சாதனை படைத்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 11 அடி ஆழம் கொண்ட பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளது. வீணாகும் கழிவு நீர் 'சீவேஜ் ட்ரீட்மென்ட்' முறையில் சுத்திகரிக்கப்பட்டு இந்தப் பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படுகிறது. இந்தச் சுத்திகரிக்கப்பட்ட நீர், பல்கலைக்கழக வேளாண் கல்லூரிக்குச் சொந்தமான 80 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும், இந்த முயற்சி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மாணவர்களுக்குச் சிறந்த நேரடிப் பயிற்சியாக அமைந்துள்ளதாகவும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது என்ற சான்றிதழையும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.