தமிழ்நாடு

வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்ப திட்டம் வகுக்க ​வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை

எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது குறித்து குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம், யோசனை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது குறித்து குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம், யோசனை தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், ஒலக்காட்டுபதி தடுப்பணையில் இருந்து கசியும் நீரை, சூரிய மின்சக்தி மோட்டார்கள் மூலம் குழாய் வழியாக, ஏரிகளுக்கு திருப்பிவிடுவதற்கான திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்படவில்லை என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீணாகும் நீரை, ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது தொடர்பான திட்டம் வகுக்க குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி யோசனை வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்