தமிழ்நாடு

திருவள்ளூர் : சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு - காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், கட்டுமான தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், கட்டுமான தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். லட்சுமிபுரம் பகுதியில் பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில், செல்லப்பன் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுககு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்