தமிழ்நாடு

வாக்கி டாக்கி திருட்டு? - இளைஞரை நொங்கெடுத்த போலீசார் - நீதிமன்றம் அதிரடி

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த தவக்கண்ணன், உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விசாரணைக்காக ஏ.முக்குளம் காவல்நிலையம் சென்ற போது, வாக்கி-டாக்கி கானவிவில்லை எனக்கூறி காவலர்கள் தாக்கியதாக கூறியுள்ளார். அவர்கள் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மனுதார‌ர் கோர முடியாது என்றார். இருந்தாலும், மனுதார‌ர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை என்பதால், இதுகுறித்து விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 3 மாத‌த்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்