திருச்சியில் பிரசார பயணம் மேற்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை வி.பி.கலைராஜன் நேரில் சந்தித்தார். ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி, தி.மு.க-வில் அவர் இணைந்து கொண்டார். பின்னர் பேசிய வி.பி.கலைராஜன், மத்தியில் ஆட்சி செய்யும் அரசை எதிர்க்க துணிச்சலான தலைமை ஸ்டாலின் என்பதால் தி.மு.க-வில் இணைந்ததாக விளக்கம் அளித்தார். தினகரனுடன் முரண்பாடு எதுவும் கிடையாது என்றும், இன்னும் பல கட்சிகளில் இருந்து ஏராளமானவர்கள் தி.மு.கவில் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.