தமிழ்நாடு

திரையரங்குகளில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிட திட்டம் - மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திரையரங்குகளில் விழிப்புணர்வு குறும்படம் வெளியிட திட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தகவல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வாக்காளர் சேவை மைய புதியதாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முக்கிய இடங்களில் பேனர்கள், பதாகைகள் வைப்பதுடன், தியேட்டர்களில் குறும்படம் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதேப்போல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியர் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்