தமிழ்நாடு

வாக்காளர் விபரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்

வாக்காளர் சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி உள்ளது.

தந்தி டிவி
வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, ஆகிய விபரங்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை தாமாகவே திருத்தம் செய்யலாம். இதற்கான தேர்தல் ஆணையம் வெளியிட்ட சிறப்பு செயலி மூலமாகவும், வாக்காளர் உதவி மையத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகத்திலும், ஓட்டுச்சாவடி அலுவலரை நேரடியாக அணுகுவதன் மூலமாகவும் விபரங்களை சரிபார்க்கலாம். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 1950 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவேற்றலாம். கடவூச்சீட்டு, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன்அட்டை. நிரந்தர கணக்கு எண், வங்கிக் கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை, மற்றும் சமீபத்தில் பெறப்பட்ட குடிநீர் இணைப்பு ரசீது, மின்கட்டண ரசீது, வாயு இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை ஆதாரமாக கொண்டு, வாக்காளர்கள் விபரங்களை சரிபார்க்கலாம் என்று தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்