சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பாடகர் கோமகன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர் என்றும், இசைக்குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர் என்றும் பதிவிட்டுள்ளார். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.