கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்று விசு, இன்று காலமானார். அவரது மறைவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் , தமாகா தலைவர், ஜி.கே.வாசன், சரத்குமார் ஆகியோர், விசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே விசுவின் உடல் திங்கட்கிழமை மதியம் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.