தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் விடுமுறை தினங்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தமிழக அரசு தடை வித்தது. இதையடுத்து, ஞாயிற்றுகிழமையான இன்று, குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்தனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரையின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.