கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர். கம்மாபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்த நிலையில், மதுபோதையில் ஏற்பட்ட மோதல் இரு தரப்பினர் இடையிலான வன்முறையாக வெடித்தது. கற்களை வீசியும், பெரிய மரத்தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கியும் சண்டையிட்டுக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.