தமிழ்நாடு

வேலையை விட்டு நீக்கியதால் வந்த ஆத்திரம்.. கஞ்சா போதையில் செய்த வெறிச்செயல்

தந்தி டிவி

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். 60 வயது முதியவரான இவர், இராஜபாளையம் பொதுப்பணித்துறைக்கு பாத்தியப்பட்ட ஆதியூர் கண்மாயை மீன் பிடிக்க ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளார். இந்த கண்மாயில், பச்சை காலணியை சேர்ந்த கார்த்திக்ஸ்வரன் மற்றும் சம்மந்தபுரத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் காவலாளியாக பணிபுரிந்து வந்திருக்கின்றனர். இதில், கார்த்திக்ஸ்வரன் கண்மாயில் உள்ள மீன்களை தொடர்ந்து திருடி வந்ததாகவும், வெளியாட்களை கண்மாயில் மீன்பிடிக்க அனுமதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த தர்மராஜ், கார்த்திஸ்வரனை வேலையை விட்டு நீக்கிய நிலையில், இதனால் ஆத்திரத்தில் இருந்த கார்த்திக்ஸ்வரன், கஞ்சா போதையில் கையில் அரிவாளுடன் வந்து தர்மராஜை வெட்டிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தர்மராஜின் சடலத்தை கைப்பற்றி மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாக உள்ள கார்த்திக்ஸ்வரனை வலை வீசி தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்