தமிழ்நாடு

குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை..!

விருதுநகர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

குப்பாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தொடுதிரை வசதியுடன் கூடிய உயர் தொழில்நுட்ப வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு புதுமை பள்ளிக்கான விருதுடன் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை, ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்பு 70 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 6 முதல் 8ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைக்காட்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளியை விஞ்சிய அரசு நடுநிலைப்பள்ளி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்