முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலொட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, நேற்று இரவு விருதுநகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வில்லிபத்திரி அருகே வந்தபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து கீழே தள்ளி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.