விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குடும்ப தகராறில், மது போதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மனைவி திவ்யா பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். சங்கராபுரத்தைச் சேர்ந்த மணி, மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த திவ்யா பாரதி கத்தியால் தாக்கியதில் மணி உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், திவ்யா பாரதியை கைது செய்து, சாத்தூர் தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.