கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ஊ. கொளப்பாக்கம் கிராமத்தில் பெய்த கனமழையால், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாராததே இந்த அவல நிலைக்கு காரணம் என்று புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.