திருவாரூர் அருகே இறுதி ஊர்வலத்தில் பூக்கள் தூவி சென்ற வாகனம், வயலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. குடவாசல் கிளியூர் கிராமத்தில், முதியவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பூக்கள் தூவிய இளைஞர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அப்பகுதி மக்கள் கயிறு கட்டி, வாகனத்தை மீட்டனர்.