கோயில் திருவிழாவில் போலீசார்-Ex. ராணுவ வீரர் இடையே மோதல்... தீயாய் பரவும் வீடியோ திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில், தகராறில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை, போலீசார் சேர்ந்து தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது... அதனை பார்க்கலாம்.... ஆரணி அருகே அர்ஜுனாபுரம் கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ்பாபு மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் பிரபாகரன் ஆகிய இருவரும் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதனால், போலீசாருக்கும் முன்னாள் ராணுவ வீரருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து, ரமேஷ்பாபு மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் பிரபாகரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.