#Nilgiris #Tiger #ViralVideo #Tourister #ThanthiTV Nilgiris Tiger Viral Video | பார்த்தாலே குலை நடுங்குதே..! - செல்போனில் பதிவான புலியின் வீடியோ உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் கிராமத்திற்கு செல்லும் சாலையில், புலி ஒன்று கம்பீரமாக சாலையை கடந்து சென்றது. வனப்பகுதியில் இருந்து மெதுவாக வெளியே வந்த புலியை கண்டதும், நீண்ட தொலைவில் வாகனங்களை நிறுத்திய சுற்றுலா பயணிகள், வியப்புடன் அதனை கண்டு ரசித்தனர். சாலையை கடந்து மறுபுறம் சென்ற புலியின் காட்சியை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்தனர். மாயார் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.