தமிழ்நாடு

மூதாட்டியிடம் அத்துமீறல்?-குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு துணையாக சென்றவர் பிணமாக திரும்பிய சோகம்

தந்தி டிவி

கூடலூர் அருகே ஆங்கூர்பாளையத்தை சேர்ந்த 80 வயதாகும் அன்னம்மாள் தோட்டத்தில் கீரை பறிக்கச் சென்றபோது, சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடிவந்தனர். இந்நிலையில், சாமாண்டிபுரம் முல்லைப்பெரியாறு பகுதியில் விஜயகுமார் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசாரை அவரை தேடினர். காவல்துறையினருக்கு உதவியாக, சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த தேவா, முகிலன், அஜித் உள்ளிட்டோரும் தேடினர். முல்லைப் பெரியாற்றில் இறங்கிய தேவா திடீரென மாயமான நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், தேவாவின் உறவினர்கள், கம்பம்-குமுளி நெடுஞ்சாலையில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாயமான தேவாவுக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்