தமிழ்நாடு

"விநாயகர் சிலை ஊர்வலம் : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு"

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ராமசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை அவசரமாக பட்டியலிடக் கோரி வழக்கறிஞர் ராமசாமி தரப்பினர் முயற்சி செய்துவருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்