தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தியன்று தெருக்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை

விநாயகர் சதுர்த்தியன்று தெருக்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தந்தி டிவி

இன்றைய தினம் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா பரவலை தடுக்க, விழாக்கள், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியான வருகிற 22ஆம் தேதி அன்று, தெருக்களில் சிலை வைத்து கொண்டாடுவது, சிலை நிறுவுவது, விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்வது, நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதிக்க இயலாது எனக் கூறப்பட்டுள்ளது. மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பண்டிகை பொருட்களை வாங்க கடைகள், சந்தைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சிறு கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

BREAKING || அமெரிக்கா பெயரை சொல்லாமலேயே நாசுக்காக அடித்த PM மோடி - தலை அசைத்த புதின், ஜி ஜின்பிங்

Kaveri | Hogenakkal | சரியாக 5 மணிக்கு பொங்கி எழுந்த காவிரி

BREAKING || மதுராந்தகம் இடைத்தேர்தல் - யார் யார் எப்போது வேட்புமனு தாக்கல்?

BREAKING || தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு

Modi BRICS Delhi Declaration | PM மோடி முன்வைத்ததும் ஒருவார்த்தை கூட மறுத்து பேசாமல் ஏற்பு