தமிழ்நாடு

லாட்டரி சீட்டு விற்பனை - 34 வழக்குகள் பதிவு : "குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை"

லாட்டரி சீட்டால் பாதிக்கப்பட்டு 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, விழுப்புரத்தில், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி கோல்டு சேகர் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

நகைத் தொழிலாளி அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட பிறகு, லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனையடுத்து உடனடியாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பெரிய வியாபாரிகளை பிடிக்காமல் சிறு சிறு வியாபாரிகளை மட்டும் போலீசார் கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி கோல்டு சேகரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாட்களில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை