தமிழ்நாடு

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன்

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சராயபாளையம் பகுதியை சேர்ந்த அமராவதியும், குணசேகரனும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 4 நாட்களாக அமராவதியை காணாமல் பெற்றோர் தேடிய நிலையில் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்

இது குறித்த புகாரின்பேரில் காதலன் குணசேகரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்ள அமராவதி வற்புறுத்தியதால் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.பின்னர் அமராவதி உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசியதாகவும் காதலன் குணசேகரன் கூறியுள்ளார். இதையடுத்து காதலன் குணசேகரன் மற்றும் பள்ளி மாணவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்பள்ளி மாணவன் வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் மற்ற மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்