பற்களால் காரை இழுத்து பெண் சாதனை செஞ்சி அருகே பெண் ஒருவர், தனது பற்களால் காரை இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே திருவண்ணாமலையை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர் கல்பனா என்பவர், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தனது பற்களை கொண்டு சுமார் 200 மீட்டர் தூரம் காரை இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மேலாளர் அமீர்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை பாராட்டி பரிசு வழங்கினர்.