தமிழ்நாடு

காவல் நிலையத்தில் லஞ்ச ஒ​​ழிப்பு துறை சோதனை எதிரொலி - இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வெள்ளிக்கிழமை இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் மீதான புகாரின் பேரில் நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத இரண்டு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளரின் வீட்டில் நடந்த சோதனையில் 100 பெட்டி பட்டாசுகளும் 120 செட் ஆடைகளும் சிக்கின. இதையடுத்து ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் சந்தோஷ்குமார், திருநாவலூர் காவல் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ், உதவி ஆய்வாளர் செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தனிப்பிரிவு காவலர் பாலாஜி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை