தமிழ்நாடு

மத்திய அரசு வழங்கிய வீடு... மாதங்களுக்கு இடிந்து விழுந்த மேற்கூரை... சிறுவன் உட்பட உயிர் தப்பிய மூவர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே, மத்திய அரசால் 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் முதியவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் வீட்டில் இருந்த முதியவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். வெயிலின் தாக்கத்தால் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அல்லது சேதமான மேற்கூரையை சரிசெய்து தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரமின்றி வீடு கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்