தமிழ்நாடு

15 கிலோ கட்டியுடன் அவதிப்படும் மூதாட்டி

மேல்மலையனூர் அருகே காலில் 15 கிலோ கட்டியுடன் வேதனைப்படும் மூதாட்டி, தமக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கோட்டை பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான கன்னியம்மாள் .

* இவருக்கு இடது காலில் சிறிதாக வளரத்தொடங்கிய கட்டி, நாளடைவில் வளர்ந்து வளர்ந்து தற்போது 15 கிலோ எடையளவுக்கு பெருகிவிட்டது.

* இதனால் இவரால் வெளியில் எங்கும் செல்ல முடிவதில்லையாம். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை கூட தமக்கு வருவதில்லை என்கிறார்.

* இதற்காக பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை என வேதனைப்படுகிறார்.

உறவினர்களும் பெரிதாக இவரை கண்டுகொள்ளததால், பண ரீதியாக கஷ்டப்படுகிறார்.

* தமது கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும், உதவித்தொகை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னயம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி