தமிழ்நாடு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மிரட்டல் விடுத்த நபரை தேடும் போலீசார்...

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார்.

தந்தி டிவி
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பெயர் குறிப்பிடாத மர்மநபர், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலை பேசி எண்ணை வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியை சேர்ந்த புவனேந்திரன் என்பவர், மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. விசாரணையில் புவனேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஏற்கனவே பலமுறை இது போல் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த புவனேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு