தமிழ்நாடு

கறிசோறு போட்டவர்கள் மண்டையை கட்டையால் அடித்து உடைத்த ஊர்மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில் அய்யனார் கோயில் ஒன்று உள்ளது. அங்கு, மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்பவர் தனது குழந்தைகளுக்கு காது குத்தும் விழா நடத்தியுள்ளார். விழாவில் குமரவேல் குடும்பத்தினருடன் சேர்ந்து கோமங்கல ஊர்மக்கள் சிலரும் கலந்து கொண்டு, கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் பணியாளர்களாக பணிபுரிந்து வந்த சிலரும் பந்தியில் அமரச் சென்ற நிலையில், அவர்களை குமரவேல் தடுத்து நிறுத்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலர் பசியில் இருப்பதாகவும், தாங்கள் அடுத்த பந்தியில் சாப்பிடுங்கள் என குமரவேல் கூறியதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், குமரவேல் ம ற்றும் அவரது உறவினர்களின் மண்டையை அப்பகுதிமக்கள் கட்டையால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இருவரை கிராம மக்கள் கோயிலுனுள் வைத்து பூட்டியது பரபரப்பை மேலும் கூட்டிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டனர். படுகாயமடைந்த குமரவேல் உட்பட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்